[X] Close

தமிழ்நாட்டில் இன்று 18,023 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

Subscribe

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,023 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 409 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 31,045 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 2,18,595 பேர் சிகிச்சையில் உள்ளனர். 


Advertisement

பாதிக்கப்பட்ட 18,023 பேரில் ஒருவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 22,74,704 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தலைநகர் சென்னையில் 1437 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 2439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 1596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் (975), திருப்பூர் (995), செங்கல்பட்டு (773) மற்றும் தஞ்சாவூர் (770) ஆகிய மாவட்டங்கள் மாநில அளவில் நோய் தொற்று பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 


Advertisement

9,992 ஆண்களும், 8,031 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று 351 பேர் உயிரிழந்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close