கோலியின் புகைப்படத்தை கலாய்த்த யுவராஜ் சிங்

Yuvaraj-Singh-to-mold-the-Kohli-s-photo

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தை யுவராஜ் சிங் கலாய்த்துள்ளார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றியைக் கொண்டாடும் வீரர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.

அந்த வகையில் கோலி, கே.எல்.ராகுலுடன் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதைக் கண்ட யுவராஜ் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பொதுவாகவே தலைவர் செல்பிக்கு போஸ் கொடுக்க சொன்னால், வீரர்களுக்கு வேறு வழியில்லை. என்ன சொன்னாலும் தலை ஆட்டி தான் ஆக வேண்டும்” என்று கலாய்த்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக கே.எல்.ராகுல், “ஆமாம் வெளிப்படையாக கூறவேண்டுமென்றால் யார் என்னை செல்பி எடுக்க சொன்னாலும், நான் எப்போதும் தயாராக இருப்பேன்” என்று பதில் அளித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement