[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

தென்னாப்பிரிக்காவில் புதிய திட்டம் ... கன்னித்தன்மை நிரூபித்தால் தான் கல்வி உதவித்தொகை

virginity-test-announce-in-south-africa

தென்னாப்பிரிக்காவில் உள்ள பெண்கள் தங்களின் கன்னி தன்மையை நிரூபித்தால் மட்டுமே அவர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கமுடியும் என அந்நாட்டு மேயரின் அறிவிப்பால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

தென்னாபிரிக்காவின் தென்கிழக்கு பகுதியல் மேயராக உள்ள டுடு மசிபுகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் இளம் வயது கர்ப்பம் மற்றும் எச்.ஐ.வி , ஏய்ட்ஸ் உள்ளிட்ட பாலின நோய்கள் பெண்களிடத்தில் அதிகரித்து வருவதால் இத்தகைய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில் இளம்பெண்கள் பாலியல் தொடர்பான செயல்களில் ஈடுபடாமல் அவர்கள் தங்களின் கல்வியில் ஆர்வம் செலுத்தவே இத்தகைய அறிவிப்பை தான் வெளியிட்டு உள்ளதாக அவர் கூறுகிறார்.

தென்னாப்பிரிக்காவில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களை விட பெண்கள் பாலின நோய்களில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.இதில் 15 - 24 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆண்களை விட நான்கு மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் 6.3 மில்லியன் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இளம் வயதில் கர்ப்பமாகும் பெண்கள் எண்ணிக்கையும் அதிகமாகும்.

தென்னாப்பிரிக்க மேயரின் இந்த அறிவிப்புக்கு மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என கூறினால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் அதை தவிர்த்து பெண்களின் கன்னித்தன்மையை நிருபித்தால் தான்  உதவித்தொகை என்பதை ஏற்க முடியாது இது பெண்களுக்கு பெரும் இழுக்காக உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close