விமானம் நடுவானில் பறந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறங்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று மணிலாவுக்குப் புறப்பட்டுச் சென்றது. அதில் 347 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட அரை மணிநேரத்துக்குள் விமானத்தின் ஒரு என்ஜினில் திடீரென்று தீப்பிடித்தது. இதைக் கண்ட பயணிகள் அலறினர்.
விமானி, உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை தயாராக நிறுத்தப்பட்டன. தீப்பிடித்த அந்த விமானம் வேகமாக விமான நிலையத்துக்குத் திரும்பியது. தீயணைப்பு வாகனங்கள் தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
விமானம் தீப்பிடித்த நிலையில், தரையிறங்குவதை பலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Is a plane suppose to spew flames? #airplane #lax @AmericanAir @flyLAXairport pic.twitter.com/62sqcnsW8M
— Big Red (@andrewblakeames) November 21, 2019
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
பொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது” - நடிகை நயன்தாரா
இது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி?