[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை..!

two-boys-among-four-of-indian-origin-family-shot-dead-in-us

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. அமெரிக்காவின் வெஸ்ட் டெஸ் மோயினஸ் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் சந்தரசேகர் சங்கரா (44), லாவண்யா சங்கரா (41) மற்றும் இரண்டு சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர்களின் உடம்பில் பல இடங்களில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு விருந்தினராக வந்த ஒருவர்தான், குடும்பத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டு கிடப்பது குறித்து போலீசாருக்கு முதலில் தகவல் தெரிவித்திருக்கிறார். போலீசார் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், என்ன காரணத்திற்காக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது தெரியவரவில்லை. சந்தேகிக்கும்படியாகவும் போலீசார் யாரையும் அடையாளம் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close