[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

"தகவல்களை வழங்குவதே தலையாய நோக்கம்" : சுந்தர் பிச்சை

google-ceo-sundar-pichai-explains-and-answered-to-us-parliamentary-inquiry-commission

கூகுள் நிறுவனத்திற்கு எதிராக சுமார் மூன்றரை மணி நேரம் அடுக்கடுக்காய் கடுமையான குற்றம் சுமத்திய உறுப்பினர்களையும், விசாரணைக் குழுவின் கடுமையான விமர்சனங்களையும் முகம் மாறாமல் அமைதியாக எதிர்கொண்ட சுந்தர் பிச்சையின் அமைதி கவனம் பெற்றுள்ளது.

சீனாவில் புதிய தேடுபொறியை தொடங்க கூகுள் திட்டமிட்டுள்ளது என்றும், அமெரிக்காவில், அரசிய‌ல் கட்சிகளிடம் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது என்றும் கூகுள் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

Image result for Sundar Pichai
தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து, சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை பெற்றவர் என்ற புகழுக்கு உரிய சுந்தர்பிச்சையிடம் சுமார் மூன்றரை மணி நேரம் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர் விசாரணைக் குழுவினர். இயல்பில் அதிகம் பேச தயங்குபவராக அறியப்படும் சுந்தர் பிச்சை, அவரது நிறுவனம் குறித்து மிகவும் மோசமான விமர்சனத்தை விசாரணைக்குழு உறுப்பினர்கள் வைத்தபோது, எந்த வித தயக்கமும் இல்லாமல், மிகவும் அமைதியாக தனது பதிலை வழங்கியது கவனம் பெற்றுள்ளது. 

Image result for Sundar Pichai

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார் பிச்சை. எந்தவொரு ஒருசார்பு நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. இருதரப்பு பரப்புரைகளுக்கும் இடமளித்தோம். இருதரப்பு விவாதங்களையும் நாங்கள் ஆதரித்தோம். மக்கள் தேர்தலில் பங்குகொள்ளத் தேவையான தகவல்களை நாங்கள் வழங்கினோம்.அரசியல் பாரபட்சத்துடன் கூகுள் செயல்பட்டது இல்லை என்றும், அனைத்து விதமான கருத்துகளையும் பதிவு செய்யும் தளமாகவே கூகுள் இயங்கி வருகிறது என்றும் சுந்தர் பிச்சை விளக்கம் அளித்தார்.

Image result for Sundar Pichai

இதனைதொடர்ந்து சர்வதேச அளவில் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவையை வழங்கும் வகையில் நிறுவனம் வளரத் தேவையான உதவிகளை வழங்கிய நாட்டின் மதிப்பிற்கு களங்கம் வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் எனவும் சுந்தர்பிச்சை உறுதி கூறினார். ‌2010 ஆம் ஆண்டு சீனச் சந்தையை விட்டு வெளியேறிய கூகுள் நிறுவனம், தற்போது அந்நாட்டு அரசின் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு அங்கு செயல்பட உள்ளதாக வெளிவரும் செய்திகள் குறித்த கேள்விக்கும் நிதானமாக பதிலளித்தார் சுந்தர் பிச்சை. சீனாவின் தற்போதைக்கு எந்த ஒரு சேவையையும் வழங்கும் திட்டம் இல்லை. மக்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதே எங்கள் அடிப்படை நோக்கம். தகவல்களைப் பெறுவது அடிப்படை மனித உரிமை என்ற வகையில் சர்வதேச அளவிலான மக்களுக்கு அத்தகவல்களை கொண்டு சேர்க்கவே நாங்கள் உழைக்கிறோம்.

Image result for Sundar Pichai

இன உணர்வைத் தூண்டும் விதமான பரப்புரைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் கூகுள் நிலைப்பாடு குறித்து கடுமையாக விமர்சித்த தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க பெண் எம்பி பிரமிளா ஜெயபால், தன்னைப் போல் புலம் பெயர்ந்த ஒருவர் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நாட்டிற்கு சேவையாற்றுவதைக் கண்டு பெருமையடைவதாகக் கூறினார்.

Image result for Sundar Pichai

மேலும் கேள்விகளை மட்டுமே எதிர் கொண்டுவந்த சுந்தர்பிச்சைக்கு பாராட்டு தெரிவித்தார். கடின உழைப்பால் உயர்ந்த சுந்தர்பிச்சை, விசாரணைக் குழுவினரை எதிர்கொண்ட விதம் தலைமைப் பொறுப்புக்கு அவர் எத்தனை பொருத்தமானவர் என்பதை உணர்த்தும் விதமாகவே அமைந்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close