[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தூங்கினார் விமானி : எல்லை தாண்டிய விமானத்தால் பரபரப்பு!

asleep-pilot-missed-destination-in-australia

விமானி அசந்து தூங்கியதால், இறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அருகே உள்ளது தாஸ்மானியா தீவு. இங்குள்ள டேவோன்போர்ட் பகுதியில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள கிங் தீவுக்கு ஒருவர் விமானத்தில் சென்றார். இது பைபர் பா-31 (Piper PA-31 ) என்ற சிறிய ரக விமானம். இதில் அவர் மட்டுமே பயணம் செய்தார். விமானத்தை அவரே இயக்கினார். 

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது அவருக்கு லேசாக தூக்கம் வந்தது. இருக்கையில் அமர்ந்தவாறே தூங்கிவிட்டார். திடீரென்று விழிப்பு வந்து பார்த்தபோது இறங்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டு, 46 கி.மீ தூரம் அதிகமாக விமானம் வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக விமானத்தைத் திருப்பி கிங் தீவில் இறக்கினார். 

இதையடுத்து அந்த விமானியிடம் ஆஸ்திரேலிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் கடந்த வருடம் விமானம் புறப்படும்போது விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close