[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

ட்ரம்ப்-கிம் சந்திப்பு: 3,000 பத்திரிகையாளர்கள் வருகை

president-trump-and-kim-jong-un-meet-in-singapore-for-historic-summit

சிங்கப்பூரில் வரும்‌ 12ஆம் தேதி அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெற உள்ளதை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் அமெரிக்கா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் பிரதிநிதி, நியூயார்க்கில் வெளியுறவுத்துறை அமைச்சர்‌ மைக் பாம்பியோவை சந்தித்தார். இதைத்தொடர்ந்து வாஷிங்டன் சென்று அதிபர் ட்ரம்பை சந்தித்து, கிம் ஜாங் உன் கொடுத்தனுப்பிய கடிதத்தையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே நடக்கவுள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சிங்கப்பூரில் வரும்‌ 12ஆம் தேதி அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெற உள்ளதை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள பிரபல செயின்‌ட் ரீஜிஸ் மற்றும் ஷங்கரி‌ லா ஹோட்டலில் இரு தலைவர்களும் தங்க உள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு தொடர்பான செய்தி சேகரிக்க உலக நாடுகளில் இருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சிங்கப்பூர் வருவ‌ர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் - கிம்முடனான சந்திப்பு தங்கள் நாட்டில் நிகழ்வது பெருமையளிப்பதாக சிங்கப்பூர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close