[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

இளவரசர் ஹாரிக்கு இன்று திருமணம்: பிசியானது லண்டன்!

the-royal-wedding-of-meghan-markle-and-prince-harry

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணம் இந்திய நேரப்படி இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் லண்டன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இளவரசர் ஹாரி மற்றும் புதிய இளவரசி மெகன் மேர்க்கல்லின் படங்கள் மற்றும் அவர்கள் படங்கள் கொண்ட பொருட்கள் விற்பனை லண்டனில் களை கட்டியுள்ளது. திருமணம் நடைபெற உள்ள விண்ட்சர் மாளிகைக்கு வந்த ஹாரியையும் அவரது மூத்த சகோதரர் வில்லியமையும் மக்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

மேலும் இளவரசர்களுடன் மக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். திருமணம் நடைபெறும் தேவாலயத்தில் நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டது. மணமக்களை வரவேற்கும் விதமான நடக்கும் குதிரை அணிவகுப்பு ஒத்திகையும் நடந்தது. இதை ஏராளமானோர் கண்டுகளித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

திருமணத்தை ஒட்டி அமெரிக்காவிலிருந்து லண்டன் வந்த மணமகள் மெகன் மேர்க்கல்லுக்கும் அவரது தாய்க்கும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருமணத்துக்காக சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மும்பையிலுள்ள டப்பாவாலாக்கள் சார்பில் மணமக்களுக்கு ஆடைகள் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அரசு குடும்பத்துடன் தங்களுக்குள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இப்பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close