[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கம்; மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தயாநிதி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.71 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.17 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பிரிட்டன் இளவரசர் நாளை திருமணம்: லண்டன் ஓட்டல்களில் ரூம் இல்லை!

prince-harry-and-meghan-markle-s-royal-wedding

பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவுக்கும் நாளை பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி உலகம் முழுவதும் இருந்து இளவரசரின் அபிமானிகள், ஆதரவாளர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் பிரிட்டனில் குவிந்து வருகின்றனர். திருமணம் நடைபெறும் விண்ட்சர் நகரில் ஏற்கெனவே அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி விட்டதால், விருந்தினர்கள் தங்குவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருமணத்தை காண வந்த பலர் சாலையிலேயே தற்காலிகக் குடில் அமைத்து தங்கி வருகின்றனர். 

இதற்கிடையே பக்‌கிங்காம் அரண்மனையில் திருமணத்துக்காக கேக் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. லண்டனைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் கிளேர் டக் என்பவர் திருமணத்துக்கான கேக்கை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். திருமணத்தையொட்டி சாரட் வண்டி ஊர்வலத்துக்கான ஒத்திகையிலும் பிரிட்டன் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருமணம் நடைபெறும் விண்டர்சர் பகுதியே விழாக் கோலம் பூண்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close