[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன

ரகசியங்கள் கசிவதை தடுக்க வெள்ளை மாளிகையில் செல்போன் பயன்படுத்த தடை

donald-trump-bans-white-house-staff-from-using-personal-mobile-phones

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தின் போது தங்களது தனிப்பட்ட செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்குள் ஊழியர்கள் தங்களது சொந்த செல்போன்கனை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்பின் அலுவல் நிர்வாக உதவியாளர்களும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலர் ஜான் கெல்லி பிறப்பித்துள்ளார். இந்தத் தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் ரகசியமாக பத்திரிகைகளுக்கு செய்திகளாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் எழுப்பியிருந்தார். அதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ரகசியமாக செய்திகள் வெளியாவதை தடுக்க ஊழியர்களின் செல்போன்கள் வெள்ளை மாளிகையின் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close