[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

தேவாலயத்துக்குள் துப்பாக்கிச் சூடு: மர்ம நபரை தடுத்து நிறுத்தியவருக்குப் பாராட்டு

1-dead-several-wounded-in-tennessee-church-shooting

அமெரிக்காவில் தேவாலயத்துக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய அடையாளம் தெரியாத நபரை அங்கிருந்த நபர் ஒருவர் துணிச்சலாக தடுத்து நிறுத்தியதால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

டென்னஸி மாகாணத்தில் உள்ள நாஷ்வில்‌லேவில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது முகத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுத் தாக்குதல் நடத்தினார். இதில் ஒருவர் உயிரிழந்தார். ‌இதனால் அங்கிருந்த அனைவரும் பீதியடைந்து அங்குமிங்கும் ஓடினர். அப்போது பிரார்த்தனை செய்வதற்காக வந்திருந்த நபர் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காண்பித்து மர்ம நபரை மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்த முகமூடி மனிதர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகே அங்கு நிலவிய பதற்றம் தணிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் துணிச்சலாக போராடி உயிரிழப்பை தடுத்து நிறுத்திய நபரை வெகுவாக பாராட்டினர். விசாரணையில் தாக்குதல் நடத்திய அந்த நப‌ர் சூடான் நாட்டைச் சேர்ந்த இமானுவேல் சாம்சன் என்பது தெரியவந்தது. அவர் சுட்டதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close