[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி
  • BREAKING-NEWS நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி
  • BREAKING-NEWS தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்

பாகிஸ்தானின் அரசியல் வரலாறு (வீடியோ)

pakistan-s-political-history

1947 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது முதல் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளையும் பிராந்திய சிக்கல்களையும் ஒருங்கே எதிர்கொண்டு வரும் நாடு பாகிஸ்தான்.

1948 ஆம் ஆண்டில் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக சண்டையிட்டது பாகிஸ்தான். 1971 ஆம் ஆண்டு கிழக்குப் பாகிஸ்தான் பிராந்தியம் தனிநாடாக முயன்றதால் பெரும் போர் மூண்டது. 1974 ஆம் ஆண்டு வங்கதேசத்தை அங்கீகரித்தது பாகிஸ்தான். 1979 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஸுல்பிகர் அலி புட்டோ தூக்கிலிடப்பட்டார். 1988-இல் ராணுவ ஆட்சியாளர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்டார்.

1998 ஆம் ஆண்டில் அணுகுண்டு சோதனைகளை நடத்தியது. 1999 ஆம் ஆண்டு ராணுவத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை பதவியில் இருந்து அகற்றினார். 2007 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். 2013 ஆம் ஆண்டில் நவாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டில் நவாஸ் ஷெரீப் மூன்றாவது முறையாக பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close