[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு.. ரஷ்யாவைக் குற்றம்சாட்டும் ஒபாமா

obama-vows-action-against-russia-for-hacks

அதிபர் தேர்தலின்போது கணினி வலையமைப்புகள் மூலம் தகவல்களைத் திருடியதாக ரஷ்யா மீது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேரடியாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதற்குப் பதில் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பும், இத்தகைய குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று கூறியுள்ளார். இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஹிலரி கிளிண்டன் தோல்வியடைந்த பிறகு இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டனுக்கு நெருக்கமானவர்களின் மின்னஞ்சல்கள் திருடப்பட்டு, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. டொனால்ட் ட்ரம்புக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டதாக சி.ஐ.ஏ. அமைப்பு ஏற்கெனவே கூறியிருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close