[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

இ-பேவில் கைக்குழந்தையை விற்க விளம்பரம் செய்த தம்பதி !

baby-offered-for-sale-on-ebay-prompts-german-probe

பெர்லினில் ஒருமாத கைக்குழந்தையை 5000 யூரோக்களுக்கு இ-பேவில் விற்பனை செய்ய விளம்பரம் செய்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெர்மனியின் பெர்லினில் பிறந்து 40 நாள் ஆன பெண்குழந்தையை இ-பேவில் விற்பனை செய்ய தம்பதிகள் ஒருவர் விளம்பரம் செய்துள்ளனர். இதையடுத்து அந்த விளம்பரத்தை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில் ‘விசாரணையில் போது அந்த குழந்தையின் பெற்றோர்கள் தான் இந்த விளம்பரத்தை வெளியிட்டதாக தெரிய வந்துள்ளது. பெற்றோரின் இணையதள சேவை மூலமே இந்த விளம்பரம் வந்துள்ளது. அவர்கள் குடும்பத்தை சேர்ந்த சிலரும் இணையதளத்தை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் தான் இந்த விளம்பரத்தை செய்தார்களா? இல்லை குடும்பத்தில் உள்ள வேறு சிலர் விளம்பரம் செய்தனரா? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்த முழு விசாரணை முடிந்த பின் குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close