[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல்: புடின் ஆதரவுக் கட்சி முன்னிலை

russian-parliamentary-elections

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் புடினின் ஆதரவுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

ஞாயிறன்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் சுமார் 25 சதவீதம் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஆளுங்கட்சியான ஐக்கிய ரஷ்யக் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் சுமார் 51 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிந்தையய கருத்துக்கணிப்புகளின் படி புடின் ஆதரவு யுனைடட் ரஷ்யா கட்சியே பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.

இதனிடையே கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த அதிபர் புடின், கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஞாயிறன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. வாக்குப் பதிவு சதவீதம் முந்தைய தேர்தலைவிட குறைந்துள்ளதையும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போதைய தேர்தலில் சுமார் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close