[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

காவல்துறைக்கு ரூ. 209 கோடி மதிப்பீட்டிலான அறிவிப்புகள்... பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

rs-209-million-worth-announcements-for-jayalalithaa-at-assembly

காவல்துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்களுக்கு 209 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, அந்தத் துறைகளுக்கு 15 தலைப்புகளின் கீழ் 71 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் காவலர்களுக்கான இடர்படி இருமடங்காக உயர்த்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். காவலர்களுக்கு 100 குண்டு துளைக்காத கவசங்கள் வழங்கப்படும் என்றும் 100 காவல்நிலையங்களில் 3 கோடி ரூபாய் செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அறிவித்தார். காவல்துறைக்கு 5 கோடியே 34 லட்ச ரூபாய் செலவில் வாகனங்கள் வாங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார் தீயணைப்புத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பத்து கோடியே 26 லட்ச ரூபாய் செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்களுக்கு ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பில் தற்காப்பு உடைகள் வாங்கப்படும் - ஊர்க்காவல்படையைப் பலப்படுத்த 45 லட்சம் ரூபாய் செலவிடப்படும் என்பன உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close