[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்

a-young-woman-commuter-on-a-two-wheeler-was-badly-injured-issue-tn-govt-told-court-that-no-pol-flag-in-the-accident-road

கோவையில் இளம்பெண் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிகம்பம் ஏதும் இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பணிக்கு செல்வதற்காக, அனுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.

               

சாலையில் இருந்த கட்சி கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில்தான் அவர் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டது. பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ஒரு கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு துண்டிக்கப்பட்டது. 

              

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிகம்பம் ஏதும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close