[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை

கடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது

police-arrested-dmk-party-member-in-chennai

தனது மகனை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக, பலரையும் ஏமாற்றி பணத்தை கடனாக வாங்கி மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
நண்பனை நம்பி தனது கல்லூரி கட்டணத்தை கொடுத்ததால், கல்வியை இழந்து கூலி வேலை செய்து வருகிறார் மூர்த்தி. கள்ளக்குறிச்சி சின்ன சேலத்தை சேர்ந்த இவர், எதிர்கால கனவுகளை சுமந்தபடி, கடந்த 2017-ல் சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் தங்கி பல்லாவரம் தனியார் கல்லூரியில் படித்த மூர்த்தி, கல்வியுடன் பகுதிநேர வேலையும் செய்து வந்தார். அப்போது தான் அவருக்கு, கவித்திரன், நிகவித்திரன் என்ற சகோதரர்கள் அறிமுகமாகியுள்ளனர்.

திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கண்ணனின் மகன்களாக இருவரும், மூர்த்தியிடம் பணம் இருப்பதை அறிந்து அவரிடம் கடன் கேட்டுள்ளனர். ஒரு வாரத்தில் திருப்பி கொடுத்து விடுவோம் என அவர்கள் கூறியதால், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் மூர்த்தி. ஆனால், வாரங்களை கடந்து மாதங்களை கடந்து வருடங்களும் கடந்துவிட்டது, இன்னும் மூர்த்தியின் பணம் திரும்பிவரவில்லை. கல்லூரிக்கு கட்டணம் செலுத்தாததால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சொந்த ஊருக்கே சென்று கூலி வேலை செய்து வருகிறார்.

கடன் கொடுத்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது மீண்டும் கடன் தொகையை வசூலிக்க வந்த மூர்த்தியை, திமுக பிரமுகர் கண்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மூர்த்தி புகார் அளிக்க, கண்ணனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

 

தனது மகன் நிகவித்திரனை வைத்து சினிமா படம் எடுப்பதற்காக கண்ணன் பலரிடம் கடன் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, கண்ணன் மற்றும் அவரது மகன் கவித்திரனை கைது செய்த காவல்துறையினர், மற்றொரு மகன் நிகவித்திரனை தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close