[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

டெஸ்ட் ட்ரைவ் எனக்கூறி பைக்கை திருடிச்சென்ற இளைஞர்!

man-makes-way-wtih-two-wheeler-during-test-ride

இரு சக்கர வாகனத்தை ஓட்டிப்பார்ப்பதாக கூறிக்கொண்டு திருடிச்சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்

சென்னையின் பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்ய கடைகள் உள்ளன. அதே போல் ஒரு வாகன விற்பனை கடையை மடிப்பாக்கத்தில் நடத்தி வருபவர் ஜான். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜானின் கடைக்கு ஆட்டோவில் வந்து இறங்கிய நபர் ஒருவர், ''ஒரு பைக் விற்பனை குறித்து உங்களது கடையின் விளம்பரத்தை இணையத்தில் பார்த்தேன். நான் அந்த பைக்கை வாங்க வந்துள்ளேன்'' என தெரிவித்துள்ளார். 

அந்த நேரத்தில் கடை உரிமையாளர் ஜானுக்கு வேறு வேலை இருந்ததால் வியாபாரத்தை அவரது சகோதரர் எட்வினிடம் ஒப்படைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். பிறகு எட்வினிடம் பேரம் பேசிய அந்த இளைஞர், கடைசியாக ரூ.30 ஆயிரத்துக்கு பைக்கை வாங்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் பைக்கை ஓட்டிப்பார்க்கவேண்டுமென்று தெரிவித்துள்ளார். 

எட்வினும் அவரை நம்பி பைக்கை கொடுத்துள்ளார். சோதனை என பைக்கை எடுத்துச் சென்ற இளைஞர் திரும்பி வரவே இல்லை. நீண்ட நேரமாகியும் இளைஞர் திரும்பிவராத நிலையில் சந்தேகமடைந்த எட்வின், அவருக்கு போன் செய்து பார்த்துள்ளார். ஆனால் போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. 

இதனையடுத்து இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் எட்வின் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்டுள்ள காவல்துறை அந்த இளைஞரை கொண்டு வந்து இறக்கிய ஆட்டோ ஓட்டுநரிடமும்,சிசிடிவி காட்சிகள் கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close