[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்

aruna-jagadeeshan-commission-summons-seeman-in-tuticorin-firing-case

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் ஒய்வு பெற்ற அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்  அனுப்பியுள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

அதன்படி தூத்துக்குடியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நாளை ஆஜராகி கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏவும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இந்த வாரம் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close