[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

இன்றைய முக்கியச் செய்திகள் சில!

today-s-top-headlines

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகிய இருவர் இடையே சந்திப்பு நடைபெற உள்ள நிலையில் சீன அதிபர் ஸி ஜின்பி்ங் நாளை மறுநாள் சென்னை வருகிறார்.

பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விமானத்தில் பறந்து, பூஜை போட்டு பெற்றுக் கொண்டார்.

தோல்வி பயத்தால்தான் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்னைகளை தங்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கான சீன தூதர் சுன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசராவை ஒட்டி சூரசம்ஹாரம் விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேட்டூர் ஜலகண்டேசுவரர் ஆலய மூலவர் லிங்கம் தம்மிடம் இருப்பதாக கூறிய விவகாரத்தில், நித்யானந்தா மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. 

உலகளவில் 220 கோடி பேருக்கு பார்வை குறைபாடு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close