[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

சீன அதிபர் வருகைக்காக பள்ளிகள் மூடலா? நம்பவேண்டாம் என காவல்துறை அறிவிப்பு

chennai-police-has-released-press-release-on-pm-visit

பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்பின் போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்வதற்குறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது

வரலாற்று சிறப்புமிக்க மால்லபுரத்தில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் சந்திக்கும் மற்றொரு வரலாற்று நிகழ்வு நடைபெற உள்ளது. அதற்காக வரும் 11ஆம் தேதி சென்னை வரும் ஸீ ஜின்பிங், பல்வேறு நிகழ்சிகளை முடித்துக் கொண்டு 12ஆம் தேதி புறப்படுகிறார். இந்த இரு நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல்துறை உயரதிகாரிகள் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன

இந்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்வதற்குறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்ட பத்திரிகை செய்தியில், அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதிகளில் போக்குவரத்து நிறுத்தம் மற்றும் மாற்றம் குறித்தோ, வியாபாரம், கல்வி நிறுவனங்கள் மூடுதல் குறித்தோ, மற்ற நடவடிக்கைகள் குறித்தோ சென்னை மாநகர காவல்துறை சார்பாக எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close