[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

புதுவீட்டை பள்ளிக்கூடத்திற்காக அளித்த பூக்கடைக்காரர்!

flower-seller-gave-his-own-home-to-school-in-trichy

திருச்சியில் கனவு இல்லத்தை கல்விக் கூடமாக தியாகம் செய்த பூக்கடைக்காரரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் அதே பகுதியில் பூக்கடை வைத்திருக்கிறார். தான் சம்பாதித்த பணத்தை சிறிது சிறிதாக சேமித்து குடிசை மாற்று வாரிய திட்டத்தின் உதவியுடன் 10 லட்சம் ரூபாய் செலவில் புது வீட்டை கட்டினார் தியாகராஜன்.

இந்நிலையில்தான் நொச்சிவயல் புதூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடம் சேதம் அடையவே மாற்றுக்கட்டடம் தேவைப்பட்டது. அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி வீணாகி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தான் கட்டிய புது வீட்டை தற்காலிக பள்ளிக் கூடமாக நடத்திக்கொள்ள தியாகராஜன் அனுமதி வழங்கியுள்ளார்.‌

எந்தவொரு வாடகையையும் பெறாமல், மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வீட்டை மாணவர்களின் நலனுக்காக தியாகராஜன் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close