[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

பெரம்பலூரில் கல்லூரி மாணவி மாயம் - காவல்துறை விசாரிக்க மறுப்பதாக புகார் 

police-did-not-take-complaint-about-college-girl-missing

பெரம்பலூரில் காணாமல் போன கல்லூரி மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் அளித்த புகாரை பெற காவல்துறையினர் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சின்னாறு கிராமத்தைச் சேர்ந்த நிவேதா பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்ற நிவேதா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அங்கிருந்த காவலர்கள் புகாரை பெற மறுத்துவிட்டதாக தெரிகிறது. 

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்றதாகவும் அங்கும் தங்களது புகார் ஏற்கப்படவில்லை என்றும் நிவேதாவின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் அழகேசனிடம் கேட்ட போது நிவேதா காணாமல் போனது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தா‌ர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close