[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

கனமழை எதிரொலி : கோவை, நீலகிரியில் நாளை விடுமுறை

heavy-rain-reflect-holiday-announced-for-covai-and-nilgiris-district-on-tomorrow

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவரமாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகமான கனமழை பெய்து வந்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கோவை மாவட்டம் முழுவதுமே பரவலான மழை பெய்தது. சில்லூர் அணை, திருவாணி அணை மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள அணை என அனைத்தும் நிரம்பிவிட்டன. அத்துடன் சாலைகளிலும் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மற்றும் மாணவர்கள் சென்று சிரமப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

இதேபோன்று நீலகிரி மாவட்டத்திலும் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close