[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

மதுரை கர்ப்பிணி கொலை : முதல் கணவர் உட்பட இருவர் கைது

madurai-pregnant-lady-murder-first-husband-include-two-person-arrested

மதுரையில் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், அப்பெண்ணின் முதல் கணவர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணி பகுதியில் அம்சத் என்ற கர்ப்பிணி பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் கதவை உடைத்த நேற்று உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதை தடுக்க முயன்ற மதனுக்கும் வெட்டு விழுந்துள்ளது. 

இதில் அம்சத் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மதன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தக் கொலையை அம்சத்தின் முதல் கணவர் வடிவேலு ஆத்திரத்தில் செய்திருக்கலாம் என காவல்துறையினர் விசாரித்தனர். மேலும் வடிவேலுவை தேடி வந்தனர். இந்நிலையில் வடிவேலு மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close