[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

2 நாட்களுக்குப் பின் கூடும் சட்டப்பேரவை : நகராட்சி நிர்வாகத்துறை மீதான விவாதம்

tn-assembly-will-conducted-after-two-days

தமிழக சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 28ஆம் முதல் நடைபெற்று வருகிறது. ஜூலை ஒன்றாம் தேதி முதல், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் துறை ரீதியான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது.

இன்றைய கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் நடைபெறவுள்ளன. இதில் கேள்வி நேரம் முடிந்த பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வேலுமணி பதிலளித்து பேசுவார். கூட்டத்தின் போது தண்ணீர் பிரச்னையை பிரதான பிரச்னையாக எதிர்க்கட்சிகள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விவாதங்களுக்குப் பின்னர் துறை ரீதியான அறிவிப்புகள் வெளியாகும். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close