[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம் - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

appointed-retired-vao-madras-high-court-asks-reply-from-tn-govt

ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மறு நியமனம் செய்யும் அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 12,616 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் 2,896 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மாதம் 15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க தமிழக வருவாய்த்துறை செயலாளர் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் செல்வன் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2010-ஆம் ஆண்டு இதேபோல ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஓய்வுபெற்றவர்கள் இனி நியமிக்கப்பட மாட்டார்கள் என்ற அரசு உத்தரவாதத்தை மீறி ஓய்வுபெற்ற ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மறு நியமனத்திற்கு வயதுவரம்பு நிர்ணயிக்கப்படாதது பணி விதிகளுக்கு முரணானது என்றும், 60 வயதுக்கு மேலுள்ளவர்களை மறு நியமனம் செய்ய முடியாது என்றும், தற்போது தமிழக அரசு உத்தரவை ரத்து செய்து காலியாக உள்ள 2 ஆயிரத்து 896 பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்க உத்தரவிட வேண்டுமென வாதிடப்பட்டது.

இதையடுத்து மனுவுக்கு 3 வாரத்தில் பதிலளிக்கும் படி தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர், வருவாய் துறை செயலாளர், வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close