[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட மாணவர்கள் - வீடியோ காட்சி

two-students-fight-on-main-road-near-bus-stop-in-chennai-kk-nagar

சென்னை கே.கே நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

சென்னை கே.கே நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நேற்று மாலை பள்ளி மாணவர்கள் 2 பேர் நடுரோட்டிலேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டு கொண்டனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அந்தக் காட்சியில் 2 பள்ளி மாணவர்களில் ஒருவர் சீருடையிலும், மற்றொரு மாணவர் சட்டை அணியாமலும் கட்டிப்புரண்டு சண்டை போட்டு கொண்டது இடம் பெற்றுள்ளது. இந்தச் சண்டையை சக மாணவர்கள் யாரும் விலகிவிடவில்லை. 

 

சண்டையை உற்சாகப்படுத்துவது போல மாணவர்கள் கோஷமிடுவது வேதனை அளிக்க கூடிய விஷயமாக உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணி ஒருவர் சண்டையை விலக்க முயன்ற போது கூட, சக மாணவர்கள் தடுக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பெரிய இடையூறு ஏற்படுத்தி போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தற்போது மாணவர்கள் இது போன்று சாலையிலேயே சண்டையிட்டு கொள்வது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close