[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

எட்டாவது ஆண்டாக திறக்கப்படாத மேட்டூர் அணை - விவசாயிகள் கவலை

won-t-be-possible-to-open-mettur-dam

போதிய தண்ணீர் இல்லாததால், இந்த ஆண்டும் மேட்டூர் அணை உரிய தேதியில் திறக்கப்படவில்லை. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு பொருட்படுத்தாததால், தொடர்ந்து 8-வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதியன்று அணை திறக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழையே தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு தமிழக வேளாண்மையின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணையிலிருந்து, ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை  சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த முறை அணை கட்டப்பட்டதிலிருந்தே பின்பற்றப்படுகிறது. 

மேட்டூர் அணையின் நீரைக் கொண்டு, காவிரி பாயும் மாவட்டங்களில் வேளாண் பணிகள்‌ நடைபெறும். அடுத்தடுத்து ஜனவரி 28 ஆம் தேதி வரை தேவைக்கேற்ப, தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடியாகும்.

ஆனால், மேட்டூர் அணையில் போதிய இருப்பு இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா தண்ணீரைத் திறக்காததால், மேட்டூர் அணை 8-வது ஆண்டாக உரிய தேதியில் திறக்கப்படவில்லை.

பொதுப்பணித் துறை பதிவேட்டின்படி, மேட்டூர் அணையிலிருந்து இதுவரை 85 முறை டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதில் 15 முறை மட்டுமே ஜூன் 12 ஆம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்கூட்டியே 11 முறையும், காலதாமதமாக 59 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் தமிழக டெல்டா பாசனத்திற்கு 330 டிஎம்சி வரை தண்ணீர் தேவைப்படுகிறது. மேட்டூர் அணையின் தண்ணீர் கொள்ளளவு 93.4 டிஎம்சி என்பதால், மாதந்தோறும் கர்நாடக அணைகளிலிருந்து தங்கு தடையின்றி கிடைத்‌தால் மட்டுமே தமிழகத்தின்‌ பாசனத் தேவை முழுமை பெறும். தற்போதைய சூழலில் பாசன நீருக்காக கர்நாடகாவை நம்பி இருக்காமல், கோதாவரி - காவிரி இணைப்புப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 45 அடியாகவும், தண்ணீர் இருப்பு 15 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு வரும் ஆயிரம் கனஅடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக அப்படியே திறக்‌கப்படுகிறது. தற்போதைய தண்ணீர் இருப்பு வெகு சில நாட்களுக்கான குடிநீர் தேவையை மட்டும் பூர்த்திசெய்யும். 

கர்நாடக அரசு தண்ணீரைத் திறக்காமல் வழக்கம்போல கைவிட்டுவிட்டதால், மேட்டூர் அணையும் காவிரி ஆறும் வறண்டு காணப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close