[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

பணம் கொடுக்கல் வாங்கல் தகறாறு... அடிதடியில் ஈடுபட்ட பார் நாகராஜ் கைது

police-have-arrested-14-people-including-bar-nagaraj-in-pollachi-involving-the-money-laundering-dispute

பொள்ளாச்சி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஈடுபட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் பார் நாகராஜ் உள்ளிட்ட 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி ஜோதிநகர் டி காலனியில் வசிக்கும் சிபின் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சபரீஸ்வரன் என்ற இளைஞருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிபின் வீட்டிற்கு தனது கல்லூரி நன்பர்களுடன் சென்ற சபரீஸ்வரன் அவர் வளர்த்துக்கொண்டு இருந்த விலை உயர்ந்த நாய்க்குட்டி (ஹக்) யினை தூக்கி வந்துள்ளார். Image result for பார் நாகராஜ் கைது

இந்நிலையில் சிபின் தனது நண்பனின் இல்லத்திற்கு ரம்ஜான் விருந்திற்காக சென்றபோது அங்கு தனது நாய்க்குட்டியினை பார்த்ததும், தனது கல்லூரி நன்பர்களுடன் சேர்ந்து தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சபரீஸ்வரன் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் பார் நாகாரஜனிடம் முறையிட்டுள்ளார். இதனால் பார் நாகராஜ், சபரீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களுடன் சிபின் தரப்பினருடன் அடிதடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இரு தரப்பினரும் சினிமாவை மிஞ்சும் வகையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு, இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர்.

Image result for கைது

இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பார் நாகராஜ், சபரீஸ்வரன் உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில் கைது செய்யப்பட்ட பார் நாகராஜ், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர். தற்போது பிணையில் வெளியேவந்துள்ள அவர், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close