[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்... ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது...!

dmk-mp-s-meet-today

தேர்தலில் வெற்றி பெற்ற ‌திமுக மக்களவை உறுப்பினர்களின் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ‌மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 மக்களவை தொகுதிகளில் திமுக 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர திமுகவின் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த சின்ராஜ், மதிமுகவை சேர்ந்த கணேசமூர்த்தி ஆகிய 4 பேர் என திமுக சார்பில் மொத்தம் 23 பேர் மக்களவை உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மக்களவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய எம்.பி.க்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close