[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

விவசாயிகளின் வாழ்வாதார திட்டங்களை காக்க பிரதமரிடம் வலியுறுத்த ஜெயலலிதாவுக்கு கோரிக்கை

tn-farmers-request-to-chief-minister-jayalalithaa

முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மோடியை சந்திக்கும்போது முன்வைக்கக்கூடிய கோரிக்கைகளில் காவிரி நதிநீர் பிரச்னையும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் திட்டங்களை பிரதமரிடம், தமிழக முதலமைச்சர் முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படாததால், 5-ஆம் ஆண்டாக சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. முப்போக சாகுபடி மறைந்து, 2 போக சாகுபடியில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக ஒரு போக சாகுபடி செய்வதே குதிரைக் கொம்பாகி விட்டதாகக் கூறுகின்றனர். ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்கும் வகையில், காவிரியில் இருந்து தண்ணீர் பெற ஆவண செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கூட்டுறவு வங்கிகள் மட்டுமின்றி, பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசை முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்பது டெல்டா விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரை உரிய நேரத்தில் பெற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரி ஒழ‌ங்காற்று குழு அமைக்கவும் பிரதமரை வலியுறுத்தவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்காததாலேயே பாசனத்திற்கு அண்டை மாநிலங்களை நாட வேண்டியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தநிலையை மாற்ற, நீர்நிலைகளை தூர்வார மத்திய அரசிடம் சிறப்பு நிதி பெறவும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் நீடித்து வரும் பிரச்னைகளுக்கு, முதலமைச்சரின் டெல்லி பயணத்திற்கு பிறகு தீர்வுக்காணப்படும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close