[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஈரோடு மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக

cricket-player-gautam-gambir-candidate-for-east-delhi-by-bjp

கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். 

மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் கிழக்கு டெல்லி மற்றும் புது டெல்லி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. இதில் கிழக்கு டெல்லியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரும், புது டெல்லியில் பாஜக மினாக்‌ஷி லேகியும் போட்டியிடுகின்றனர். ராஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய் பரப்பி வருவதாக வழக்கு தொடர்ந்தவர் மீனாக்‌ஷி லேகி என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே டெல்லி மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி, புது டெல்லி தொகுதியில் முன்னாள் அமைச்சர் அஜய் மாக்கென் போட்டியிடுகிறார். வட கிழக்கு டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் களமிறங்க உள்ளார். சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்திருந்த நிலையில் அத்தொகுதி ஜெ.பி.அகர்வால் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close