[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

144 தடை உத்தரவு : போக்குவரத்து பாதிப்பு ; கடைகள் அடைப்பு 

no-transport-facility-in-ponnamaravathi-because-of-section-144

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒரு சமூகத்தை இழிவாக பேசி வாட்ஸ்அப்பில் வெளியிட்ட நபர்களை கைது செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது காவலர்கள் தாக்கப்பட்டு போலீசார் வாகனங்கள் உடைக்கப்பட்டது. இதனையடுத்து பொன்னமராவதி பகுதியை சுற்றியுள்ள 30 கிராமங்களில் நேற்று மாலை 144 தடை உத்தரவை இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் பிறப்பித்தார்.


இந்நிலையில் இன்று காலை மீண்டும் பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 1000 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமயத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்டு போட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பொன்னமராவதி பகுதி முழுவதும் திருச்சி மண்டல ஐஜி வரதராஜு மற்றும் திருச்சி மண்டல டிஐஜி லலிதா லட்சுமி தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close