[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஈரோடு மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு

the-court-has-ordered-the-rehabilitation-department-to-verify-the-assets-of-the-government-school-teachers

கல்வித்துறையில் ஊழல் அதிகரித்து விட்டதால், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகம் செய்து, 2018 அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த அன்னாள் என்ற அரசுப் பள்ளி ஆசிரியை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த அரசாணையை எதிர்த்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்ததாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைப்பதிவை உறுதி செய்யவே பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைப்படுத்தபட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து அரசு பிறபித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள ஆசிரியர், எப்படி மாணவருக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால்தான்  பயோமெட்ரிக் வருகைப்பதிவு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த அரசாணையை விரைந்து அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். 

கல்வித்துறையில் ஊழல் அதிகரித்து வருவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சரிபார்க்க வேண்டும் எனவும், ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

தன்னுடைய அடிப்படை உரிமை பாதிப்பதாக மனுதாரர் கருதினால், பணியில் இருந்து அவர் விலகி கொள்ள வேண்டும் என்றும், அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளையும், பணி விதிகளையும் பின்பற்றிதான் ஆக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதிக சம்பளம், உட்கட்டமைப்பு வசதிக்காக அரசு அதிக அளவில் நிதியை செலவு செய்யும் நிலையில் போதுமான தேர்ச்சி விகிதத்தை காட்டாததால் அரசுப் பள்ளியின் மீது பெற்றோர் நம்பிக்கை இழந்து விட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close