[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

திருவாரூர் ஆழித் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

thiruvarur-chariot-festival-2019

திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் ஆழித்தேர் அசைந்து வரும் அழகினை காண கண் ‌கோடி வேண்டும் என்பார்கள். தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூற முடியாத அளவு பழமையானது என திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பெருமைக்குரியவை, தியாகராஜ சுவாமி திருக்கோவிலும் அதனோடு இணைந்த ஆழித்தேரும். திருமுறையில் பாடப்பெற்ற பெருமையும் ஆழித்தேருக்கு மட்டுமே சொந்தமானது. 16.22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி திருக்கோவிலில், 3 பிரகாரங்களும், 78 சன்னதிகளும், 9 கோபுரங்களும், 11 மண்டபங்களும் உள்ளன. 114 சிவலிங்க திருமேனிகளையும், 54 விநாயகர் விக்ரகங்களையும் கொண்டுள்ளது.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழித்தேர் 96 அடி உயரமும் 31 அடி அகலமும் 300 டன் எடையும் கொண்டது. ஆழித்தேருக்காக 31 அடி உயரத்திலான மரத்தேர் முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மேல் பனஞ்சப்பை, மூங்கில்கள், தேர்ச்சீலைகள் அமைக்கப்படும். 2 இரும்பு அச்சுகளில் 9 அடி விட்டமும், ஒன்றரை அடி அகலமும் உடைய 4 இரும்பு சக்கரங்களின் மேல் கலை நயம் மிக்க சிற்பங்களும் அமைந்துள்ளது. ஆழித்தேருக் கான 4 பெரிய குதிரைகள் கும்பகோணத்தில் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் கண்ணப்ப நாயனார், அமர்நீதிநாயனார், ஏனாதிநாயனார் போன்ற 63 நாயன்மார்களின் சிற்பங்களும், பெரிய புராணம் மற்றும் சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிவபுராண காட்சிகளும் இத்தேரில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய தேர் திருவாரூர் ஆழித்தேர்.


திருவாரூர் ஆழித் தேரோட்டம் இன்று காலை 7.15 மணி அளவில் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். கடந்த திங்கள்கிழமை தியாகராஜர் வீதி உலா மூலம் வந்து தேரில் வைக்கப்பட்டார். பின் ஒரு வார காலமாக அபிஷேக ஆராதனைகள் தியாகராஜருக்கு நடைபெற்று இன்று தேரோட்டம் நடைபெற்றது. 

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூர் ஆழித் தேரோட்டத்தை கண்டுகளித்தனர். எண்கோண வடிவமாக அமைந்துள்ள ஆழித்தேரினை நான்கு மாட வீதிகளில் உலா வரும் பொழுது குதிரைகள் அசையும் அழகு காண்பதற்கு கன்கொள்ளா காட்சியாக இருந்தது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

படங்கள் : ராஜசேகர், செய்தியாளர் - திருவாரூர்.

போட்டோ கேலரி

1 of 23

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close