[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

தூத்துக்குடி பறக்கும்படை சோதனையில் சிக்கியது 108 கிலோ தங்கம் 

108-gold-jwell-seized-in-thuthukudi

தூத்துக்குடி நகரில் ஆவணங்கள் இல்லாத 108 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் தூத்துக்குடி நகரில் ஆவணங்கள் இல்லாத 108 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி நகரில் தபால் தந்தி அலுவகம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகா எண் கொண்ட வாகனம் ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில், 108 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நகைக் கடைகளுக்கு தங்கங்களை ஆர்டர் செய்து எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் தகுந்த ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து 108 கிலோ தங்க நகைகளையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து பறக்கும்படை அதிகாரிகள் ஆட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர். அங்கு வாகன ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவணங்களைக் காட்டிவிட்டு பிறகு தங்கத்தை கொண்டு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரி ஆவணங்களை சரிப்பார்த்து வருகிறார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close