[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

திமுக, எம்.எல்.ஏ, எம்,பிக்கள் கூட்டம்: 11 ஆம் தேதி நடக்கிறது!

dmk-mp-mla-s-meeting-to-be-held-at-11th-march

மக்களவைத் தேர்தலையொட்டி, வரும் 11ஆம் தேதி திமுக. எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவா லயத்தில் நடக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், கூட்டணி உடன்பாட்டில் தீவிரமாக ஈடு பட்டுள்ளன. பல கட்சிகள் கூட்டணியை முடிவு செய்து தொகுதி ஒதுக்கீட்டையும் முடித்துவிட்டன. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாக, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக, அந்த கூட்டணியோடு இணையும் என்று தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடு இன்று முடிந்துவிட்டது. மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

இந்நிலையில் தேர்தலையொட்டி, வரும் 11 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம் அண்ணா அறிவால யத்தில் நடக்கிறது. கலைஞர் அரங்கில் அன்று காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடைபெறுகிறது. இதை திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close