[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

’திமுக கூட்டணியில் தேமுதிக என்பது நல்ல எண்ணம்’: ஸ்டாலின் சூசகம்!

m-k-stalin-meets-vijayakanth

திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என்பது நல்ல எண்ணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  கூறும் போது, ’’தேமுதிக தலைவர் விஜயகாந்த், என்னை அண்ணன் என்றுதான் தொடர்ந்து அழைத்துக்கொண்டிருக்கிறார். அதையும் தாண்டி கருணாநிதி மீது அன்பும் பக்தியும் கொண்டிருப்பவர். கருணாநிதி மறைந்தபோது அவர் வெளிநாட்டில் இருந்தார்.

அப்போது அவர் அனுப்பிய வீடியோ காட்சியில் தாங்க முடியாமல் அழுத காட்சி மறக்க முடியாது. பின்னர் அமெரிக்காவில் இருந்து, சிகிச்சை முடிந்து இங்கு வந்தபோது, நேரடியாக அவர் கருணாநிதியின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய காட்சி, அவரிடத்திலேயே விஜயகாந்த் வைத்திருக்கும் அன்பைக் காட்டியது. அவர் உடல் நலம் தேறி இப்போது வந்திருக்கிறார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் மக்கள் தொண்டாற்ற வேண்டும். அவரிடம் உடல் நலம் பற்றி மட்டும் விசாரித்தேன். அவரை மனிதாபிமான உணர்வோடுதான் சந்தித்தேன். நீங்கள் நினைப்பது போல எதுவும் பேசவில்லை'' என்றார்.

பின்னர், ’உங்கள் கூட்டணிக்கு தேமுதிக வந்தால் ஏற்பீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘ உங்கள் நல்ல எண்ணத்துக்கு நன்றி’ என் றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close