[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிப்போம்” - நீதிபதிகள் எச்சரிக்கை

high-court-judges-to-warning-to-tamilnadu-government-about-statue-theft-case

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை அரசு கையாளும் விதத்தை பார்க்கும்போது தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு கடந்த ஒரு வருடமாக விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் தரப்பில் இருந்து தனக்கு அலுவலகம் இன்னும் முறையாக ஒதுக்கப்படவில்லை எனவும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தனி அலுவலகம் இல்லாமல் நடுத் தெருவில் நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து நீதிபதிகள் அரசு தலைமை வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டனர். இதற்கு ஓய்வு பெற்ற ஒருவர் காவல்துறை கீழ் உள்ள அதிகாரிகளை எப்படி இடமாற்ற செய்ய முடியும் என நீதிபதிகளிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற ஒருவர் டிஜிபியாக தொடரும்போது சிறப்பு அதிகாரி ஏன் தொடரக்கூடாது எனக் கேள்வி எழுப்பினர். 

பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு 50 நாட்களாகியும் இன்னமும் ஏன் அலுவலகம் ஒதுக்கப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பொன்.மாணிக்கவேல் அலுவலகம் வேண்டாம் எனக் கூறியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பொன்.மாணிக்கவேல் தரப்பு கூடுதல் டிஜிபியின் உதவியாளர் ஒருவர் தனக்கு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக சாவியை கேட்டதால் அலுவலக சாவியை ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்களில் திருப்தி அடையாத நீதிபதிகள் சிலைக் கடத்தல் வழக்கு தொடரப்பட்டதில் இருந்து அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை எனவும் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை அரசு கையாளும் விதத்தை பார்க்கும்போது தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்த வழக்கில் அரசின் நிலைப்பாடும் செயல்பாடும் என்ன என்பதை விளக்க வேண்டும் எனக் கூறி வழக்கை 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற நிலையில் அதையடுத்து சிறப்பு அதிகாரியாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close