[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

திட்டமிட்டப்படி டிச.4ம் தேதி முதல் வேலை நிறுத்தம் : ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

jacto-geo-members-announced-indefinite-protest-starts-from-december-4-as-planned

புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டிசம்பர் நான்காம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்‌ உடன்பாடு எட்டப்படாத‌ நிலையில், இன்று திருவல்லிக்கேணியில் ஜக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திட்டமிட்டபடி வரும் 4ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன், அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திருப்தி இல்லை என கூறினார்.

        

மேலும் அவர் கூறுகையில், “7அம்சகோரிக்கைகள் குறித்து 20 ஒருங்கிணைப்பாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் எடுத்து கூறினோம். ஜெயக்குமார் எங்கள் கோரிக்கையை முதல்வர் கவனத்துக்கு எடுத்துசெல்வதாக அலட்சியமாக கூறினார். ஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதி அவரது படத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். 

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும். டிசம்பர் 6ம் தேதிக்குள் முதல்வரே எங்களை அழைத்து பேசினால் ஸ்டிரைக்கை கைவிடுவது பற்றி பரிசீலனை. பேச்சு நடத்தாவிடில் டிசம்பர் 7 முதல் போராட்டம் தீவிரமடையும்” என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close