[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 4, 5-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

chance-for-heavy-rain-in-tamilnadu

தென் கடலோர ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட கடலோரங்களில் டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலுக்கு பிறகு தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது. பின்னர் அது வலு குறைந்து தமிழகத்தின் உள் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நீடித்தது. இதன் காரணமாக டெல்டா பகுதிகளிலும் சில இடங்களிலும் கனமழை பெய்தது.

சென்னையை பொருத்தவரை இடைவெளிவிட்டு சிலமுறை மழை பெய்தது. இருப்பினும் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட குறைவாகவே பெய்துள்ளது. சென்னையில் இந்தாண்டு இதுவரை அவ்வளவு மழை இல்லை. இதனால் அடுத்தாண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் சென்னை வாசிகளிடையே நிலவுகிறது. அதேசமயம் டிசம்பர் மாதத்தில் எப்படியாவது மழை பெய்து விடும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்நிலையில் தென் கடலோர ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட கடலோரங்களில் டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையை நோக்கி புதிய கிழக்கு திசை காற்று வீசும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், அந்தமான் அருகே ஒரு வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளதாகவும் அதனால், அந்தமானில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close