[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

புயல் பாதிப்பிலும் லஞ்சமா ? அதிர்ச்சிக்குள்ளான மக்கள்

municipal-worker-asking-bribe-for-power-supply

புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் மின் இணைப்பு வழங்க நகராட்சி ஊழியர் ஒருவர் , பணம் கேட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இருந்தால்தான் குடிநீர் விநியோகம், நீரேற்றல் போன்ற பணிகள் நடக்கும் என்ற நிலையில், மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. கரூர், ஈரோடு, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2500 மின்வாரிய ஒப்பந்தத்தொழிலாளர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மழையையும் பொருட்படுத்தாமல் மின்வாரிய ஊழியர்கள் உழைத்து வருகின்றனர். 

இந்நிலையில் புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியில், புயலால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்க ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி ஊழியர் விஜயன், வீடு ஒன்றுக்கு 500 ரூபாய் கேட்பதும், பணம் கொடுத்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், இல்லையென்றால் தாமதமாகும் என்றும் அந்த ஊழியர் பேசியது அம்பலமாகியுள்ளது. கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

மின் இணைப்புக்கு ரூ.500 லஞ்சம் கேட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். மின் இணைப்புக்கு கட்டணம் வாங்குமாறு யாரிடமும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close