[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சுனாமிக்கு பிறகு மிகப்பெரிய இயற்கை பேரழிவு கஜா..!

gaja-worst-disaster-to-hit-tn-after-tsunami

சுனாமிக்கு பின் கஜா புயல் மூலம் தமிழகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்தித்துள்ளது என கடலோர மாவட்ட மக்கள் கருதுவதாக தேசிய பேரிடர் பொறுப்பு படையின் துணை கமாண்டென்ட் ராஜன் பாலு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்தள்ள பேட்டியில், “ சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களை வர்தா புயல் தாக்கியபோது காற்றின் வேகம் எவ்வளவு இருந்ததோ அதே வேக காற்றின் வேகம் கஜா புயல் தாக்கத்திலும் இருந்துள்ளது. கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்மாவட்டங்களான திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களிலும் கஜா தனது கோர முகத்தை காட்டியுள்ளது.

கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலுக்கு பலர் உயிரிழந்த நிலையில், சுனாமிக்கு பின் தற்போது கஜா புயலைத் தான் மிகப்பெரிய இயற்கை பேரிழிவாக கடலோர மாவட்ட மக்கள் கருதுகின்றனர்.

புயல் தொடர்பான அறிவிக்கைகளை அரசு முன்னெச்சரிகையுடன் சிறப்பாக கையாண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இல்லையென்றால் தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்பு 46-ஐ காட்டிலும் அதிகம் பேர் உயிரிழந்திருக்க நேர்ந்திருக்கும். சுவர் இடிந்து விழுந்தது. மரங்கள் சரிந்து விழுந்ததே பெரும்பாலான உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

புதுச்சேரி மற்றும் தமிழக அரசின் கோரிக்கைக்கு ஏற்ப தற்போது 10 பேரிடர் மீட்புப் படையினர் களத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எங்களது படையினர் 1629 மரங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். சாய்ந்து கிடந்த ஏராளமான மின்கம்பங்களையும் அகற்றியுள்ளனர்.

அடிக்கடி புயல் பாதிப்பிற்குள்ளாகும் கடலூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தரைக்கு அடியில் செயல்படும் கேபிள் வயர்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் பேரிடர் காலங்களில் பாதிப்பு குறையும். மனித உயிரிழப்பும் தவிர்க்கப்படும். சாய்ந்து நிற்கும் மரங்கள், சேதமைடைந்த மின்கம்பங்கள் ஆகியவற்றை பேரிடர் காலத்திற்கு முன்னதாகவே சீரமைக்கும்பட்சத்தில் புயல் போன்ற நேரங்களில் அதிக பாதிப்புகளை தவிர்க்கலாம்.” என தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close