[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

நாட்டு வெடி வெடித்த மாணவர் உயிரிழப்பு

a-boy-die-for-crackers-bursting-in-namakkal

நாமக்கல்லில் தீபாவளி கொண்டாடத்தில் நாட்டு வெடி வெடித்ததில்‌ ஏழாம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழ‌ந்தார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த வடுகபட்டி சக்திநகர் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன, சாந்தா லட்சுமி தம்பதியினரின் மகன் மணிவேல். 7-ம் வகுப்பு படித்து வரும் இவர் இன்று தீபாவளி பண்டிகையை ஒட்டி தனது நண்பர்கள் சூர்யா, வசந்த் ஆகியோருடன் பட்டாசு வெடித்து வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் நாட்டு வெடிகளை நிலத்தில் புதைத்து வெடித்ததாக தெரிகிறது. 

அதில் ஒரு வெடி வெகுநேரமாக வெடிக்காமல்  இருந்த நிலையில், அதனை சென்று பார்த்த போது திடீரென வெடி வெடித்துள்ளது. இதில் மணிவேலின் மார்பு பகுதியிலும், சூர்யா மற்றும் வசந்த ஆகியோரின் உடல் பாகங்களிலும் வெடி பட்டு படுகாயமடைந்தனர். இதனையடுத்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். 

இதில் மணிவேல் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியே உயிரிழந்துவிட்டார். படுகாயமடைந்த சூர்யா, வசந்த் ஆகிய இருவரும் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close