[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

“கலையரசன் தற்கொலைக்கு மியூஸிக்கலி மட்டும் காரணமல்ல”- காவல்துறை 

not-only-online-trolls-reason-for-youth-s-suicide-says-police

பெற்றோர் கண்டித்த காரணத்தினாலும் மியூசிக்கலி கலையரசன் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள வியாசார்பாடி, கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் கலையரசன் (24). இவர் கடந்த 12ஆம் தேதி வியாசார்பாடி ரயில் நிலையத்தின் அருகே இருந்த தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கலையரசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் விசாரணையில் கலையரசன் மியூஸிக்கலி ஆப்-ல் பெண் குரல்களில் பாட்டுப்பாடியும், பெண் வேடமிட்டும் வீடியோக்களை பதிவு செய்திருப்பது தெரியவந்தது. அந்த வீடியோவிற்கு பலரும் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு, கிண்டல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? எனக் காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். 

கலையரசனுடன் சேர்ந்து வீடியோ பதிவு செய்த அவரது நண்பர்களிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தனது வீடியோவை பலரும் கிண்டல் செய்துள்ளதை, கலையரசனே மியூஸிக்கலி ஆப்-ல் பகிர்ந்து வருந்தியிருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனாலும் பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவருடன் நட்பு பாராட்டியதாகவும், இதனை கலையரசனின் பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. பெற்றோரின் கண்டிப்பினாலே கலையரசன் தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கலையரசன் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close