[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

மாலை 6 மணியுடன் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

tasmac-as-closed-at-6pm-today-for-karunandhi-health-condition

காவேரி மருத்துவமனை சற்று முன்பு வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரது முக்கிய உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சிக்கல் நிலவுகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

கருணாநிதி கவலைக்கிடம் என்ற செய்தியைக் கேட்டு காவேரி மருத்துவமனை முன் குவிந்துள்ள தொண்டர்கள் கண்ணீர் மல்க கதறி வருகின்றனர். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு திமுக தொண்டர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அதேபோல், காவேரி மருத்துவமனை பகுதியிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி இல்லம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளநிலையில், தமிழகம் முழுவதும் மாலை 6 மணியுடன் டாஸ்மாக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close