[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் விபரீத முடிவெடுத்த ஐடி ஊழியர்..!

it-employee-suicide-in-chennai

திருமணத்திற்கு பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்துக்கொண்டது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 27 வயதான பிரியங்கா என்பவர் பணியாற்றி வந்தார். ஆந்திராவை சேர்ந்த இவர் அலுவலக நேரம் முடிந்த பின்னர் அலுவலகத்தின் 9வது மாடியிலிருந்து கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் காணப்பட்ட அவர் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பிரியங்கா உயிரிழந்தார். உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கடந்த வாரம் பிரியங்காவின் திருமணத்திற்காக அவரது பெற்றோர் மாப்பிளை பார்த்ததாக தெரிகிறது. பெற்றோர் பார்த்த மாப்பிளை பிடிக்காததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close